உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகை, பணத்துடன் மகள் மாயம் போலீஸ் மீது பெற்றோர் புகார்

நகை, பணத்துடன் மகள் மாயம் போலீஸ் மீது பெற்றோர் புகார்

ஆத்துார் :நகை, பணத்துடன் மகள் மாயமான நிலையில், ஒருவர் மீது குற்றம்சாட்டி, பெற்றோர், தம்மம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் மீது டி.எஸ்.பி.,யிடம் நேற்று மனு அளித்தனர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி, நாகியம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் மகள் சரிதா, 23. பட்டதாரியான இவர், கடந்த ஆக., 21ல் மாயமானார். அவரது கல்வி சான்றிதழ்கள், 20,000 ரூபாய், 5 பவுன் நகையும் இல்லாததால், அதே பகுதியில் பழகி வந்தவருடன் சென்றிருக்கலாம் என, பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், தம்மம்பட்டி போலீசில் செந்தில்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று, சரிதாவின் பெற்றோர், உறவினர்கள், ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமாரிடம் மனு அளித்தனர். அதில், 'இரு வாரங்களுக்கு மேலாகியும் மகள் வீடு திரும்பவில்லை. அவரை மீட்டுத்தர வேண்டும்' என கூறியிருந்தனர்.தொடர்ந்து பெற்றோர், 'சந்தேக நபர் சதீஷ் மீது புகார் அளித்தும், தம்மம்பட்டி போலீசார், விசாரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மகள் உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது' என்றனர்.டி.எஸ்.பி., சதீஷ்குமார், 'புகார் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை