பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் மாணவர்களை அனுப்பாத பெற்றோர்
சங்ககிரி, சங்ககிரி, கத்தேரியில் உள்ள வளையக்காரனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 77 பேர் படிக்கின்றனர். அப்பகுதியில் சில நாட்களாக பெய்த கனமழையால், நேற்று முன்தினம் வகுப்பறை வெளியே உள்ள முகப்பு பகுதியின் மேற்பகுதியில், கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. இதனால் நேற்று, 7 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தனர்.இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'பாதுகாப்பு வேண்டும் என்பதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். சீரமைக்கவோ, புது வகுப்பறை கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.சங்ககிரி வட்டார கல்வி அலுவலர் மாதவராஜனிடம் கேட்டபோது, ''கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது குறித்து, ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்து பார்த்துள்ளனர். மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறைவு குறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.