நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க கோரி அரசு பள்ளியில் பெற்றோர் போராட்டம்
ஏற்காடு: ஏற்காடு அருகே பள்ளியை முற்றுகையிட்டு, மாணவர்களுடன் அமர்ந்து, பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து, 25 கி.மீ., தொலைவில் உள்ள சின்ன மதுார் கிராம பள்ளியில், 54 மாணவர்கள், 46 மாணவியர் படிக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y03kycce&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பள்ளியில் ஒரு நிரந்தர ஆசிரியர், ஆறு தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர். மாரமங்கலம் கிராம நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சத்யராஜ், இந்த பள்ளிக்கும் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார்.பள்ளி நிரந்தர ஆசிரியரான ஹரிஹரன், 6, 7, 8ம் வகுப்புக்கு ஆங்கில பாடம் எடுக்கிறார். ஜூன், 2ல் பள்ளிக்கு வந்த இவர், நேற்று வரை வரவில்லை. கடந்த ஆண்டும் இவர் பல நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என, பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில், மாணவர்களுடன், அவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் எனக்கூறி, பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறுப்பு தலைமை ஆசிரியர் சத்யராஜ், பெற்றோரிடம் பேச்சு நடத்தினார். 'உயர் அதிகாரிகள் வரும் வரை, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்' என, பெற்றோர் கூறினர்.தலைமை ஆசிரியர் சத்யராஜ், உயர் அதிகாரிகளிடம் போனில் பேசியதை தொடர்ந்து, 'இரண்டு நாட்களில் பள்ளிக்கு ஆங்கில பாடம் எடுக்க தற்காலிகமாக ஆசிரியர் நியமிக்கப்படுவார்; விரைவில் நிரந்தர ஆசிரியர் நியமிக்கப்படுவார்' என, கூறினார். இதற்கு உடன்படாத பெற்றோர், நிரந்தர ஆசிரியர்கள் வந்தபின், மாணவர்களை பள்ளிக்கு அனுப்புகிறோம் எனக்கூறி, மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.