ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் உறுதியாக உள்ளனர்
சேலம்: ''ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் உறுதியாக உள்ளனர்,'' என்று, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார். த.மா.கா., சார்பில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்-வாகிகள் சந்திப்பு, புது உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு சேலத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சி தலைவர் வாசன் அளித்த பேட்டி: தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்-திய அரசு வழங்கி வருகிறது. இருந்தாலும் அதை அரசியலாக்கி குற்றம் சொல்லி ஓட்டு வங்கியாக உருவாக்குவது ஆளுங்கட்-சிக்கு வழக்கமாகிவிட்டது. தென் மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை முதலிடத்-துக்கு வர, தி.மு.க., ஆட்சிதான் காரணம். கொலை, கொள்ளை, பள்ளி - கல்லுாரி முன் போதை பொருள் நடமாட்டம் அதிகமாகி விட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக, தி.மு.க.,வால் செயல்பட முடியவில்லை. அதனால் ஆட்சி மாற்-றத்தை ஏற்படுத்த மக்கள் உறுதியாக உள்ளனர். மதுக்கடைகளை மூடாமல் மக்களை, தி.மு.க., ஏமாற்றி வருகிறது. ஒரே நாடு; ஒரே தேர்தலை த.மா.கா., அங்கீகரிக்கிறது. இவ்வாறு வாசன் கூறினார்.மாவட்ட தலைவர்கள் சுசீந்திரகுமார், உலகநம்பி, செல்வம், ராம-சாமி, ராஜேந்திரன், சொக்கலிங்கம், மாநில அமைப்பு செயலர் ரகுநந்தகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.