உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இருப்பிடங்களில் இருந்தபடியே மாற்றுத்திறனாளி உதவி பெற முடியும்

இருப்பிடங்களில் இருந்தபடியே மாற்றுத்திறனாளி உதவி பெற முடியும்

சேலம், சேலம், கன்னங்குறிச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கணக்கெடுக்க வரும் முன் கள பணியாளர்களிடம், மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டை, ஆதார், வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க காட்டலாம். எந்த மாற்றுத்திறனாளியும் விடுபடாதபடி, வீடுதோறும் சென்று, அவர்களுக்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள, 'செயலி' மூலம், முறையான கணக்கெடுப்பு மேற்கொண்டு, தரவுகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதன்மூலம் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து உதவிகளும், அவர்களின் இருப்பிடங்களில் இருந்தபடியே விரைவாக பெற்றுக்கொள்ள வழி செய்யப்படும். கூடுதல் விபரம் பெற, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை, 0427 - 2415242 என்ற எண்ணில் அழைக்கலாம். கணக்கெடுப்பு முழுமையாக நிறைவு பெற, மாற்றுத்திறனாளிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை