உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளத்தில் பாய்ந்த கார் பெரம்பலுார் வாலிபர் பலி

பள்ளத்தில் பாய்ந்த கார் பெரம்பலுார் வாலிபர் பலி

ஏற்காடு: ஏற்காட்டில், 20 அடி பள்ளத்தில் பாய்ந்த காரால், 'போதை'யில் கார் ஓட்டி வந்த பெரம்பலுார் வாலிபர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு, கீரைக்காட்டில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளது. அங்கு, சென்னையை சேர்ந்த நவீன், 32, கள்ளக்குறிச்சி ஈஸ்வர், 23, பெரம்பலுார், கீழ்கணவாயை சேர்ந்த பிரசாந்த், 32, தங்கி பணிபுரிந்தனர். மூவரும் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு நள்ளிரவு, 12:30 மணிக்கு, 'ஸ்விப்ட்' காரில் காக்கம்பாடி மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்தனர். பிரசாந்த் காரை ஓட்டினார். காக்கம்பாடி மலைக்கிராமத்தில், கொண்டை ஊசி வளைவு அருகே கார் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, 20 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில், பிரசாந்த் உயிரிழந்தார். ஈஸ்வர், நவீன் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெறுகின்றனர். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை