பழிவாங்கும் நோக்குடன் பொருள் நிரல்; பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத்தலைவர் வைத்தியநாதன் அறிக்கை: பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் பிரேம்குமார், 2022 மார்ச், 5ல், ஆட்சி குழுவின் பொருள் நிரல் ரகசியத்தை, பொதுவெளியில் வெளியிட்டதாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 2023 நவ., 6ல் நடந்த, 114வது பல்கலை ஆட்சிக்குழுவில், பிரேம்குமாருக்கு எதிராக, துறை ரீதியான, ஒருதலைபட்ச விசாரணை அறிக்கைகளை சமர்ப்பித்து, பணியில் இருந்து நீக்க, துணைவேந்தர் ஜெகநாதன், தீர்மானத்தை முன்மொழிந்தார்.அரசு பதவி வழி உறுப்பினர்கள், அரசு பிரதிநிதி, பெரியார் பல்கலை, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிர்வாக கூட்டமைப்பு பிரதிநிதிகள் எதிர்ப்பால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டுக்கு பின், 116-வது ஆட்சி குழுவில், பிரேம்குமாரை பழிவாங்கும் உள்நோக்கத்துடன், அதே பொருள் நிரல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சங்கம் எதிர்ப்பை பதிவு செய்கிறது. மேலும், நவ., 22ல்(இன்று) நடக்க உள்ள, 116வது ஆட்சிக்குழு கூட்டத்திலும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டத்துக்கு புறம்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கைகளை நிராகரித்து, பிரேம்குமார் மீண்டும் பணியில் சேர உதவ கேட்டுக்கொள்கிறோம்.