மழைநீர் கொட்டிய பள்ளியில் வகுப்பறை புதுப்பிக்க அனுமதி
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்துள்ளதால், இரவில் பள்ளி வளாகத்தில் நுழையும் சமூக விரோதிகள், சமையற்கூட மின் ஒயரை துண்டித்து திருடிச்சென்றனர். அங்கே மது அருந்தி, அசிங்கம் செய்தனர்.அதேபோல் காளியாகோவில்புதுார் அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தின் கான்கிரீட் தளம் சேதம் அடைந்ததால், மழைநீர் வகுப்பறைக்குள் கொட்டியது. மேற்கூரை சிமென்ட் கலவை பெயர்ந்து விழுந்ததால், மாணவர்கள்பக்கத்து கட்டடத்துக்கு மாற்றப்பட்டனர்.இதனால் பனமரத்துப்பட்டி கமிஷனர் கார்த்திகேயன், சந்தைப்பேட்டை பள்ளிக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டவும், காளியாகோவில்புதுார் பள்ளி வகுப்பறை கான்கிரீட் தளத்தை, 5 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கவும் முன்மொழிவு தயாரித்து, அரசு அனுமதிக்கு அனுப்பினார். அப்பணியை, ஒன்றிய பொது நிதி மூலம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.