உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்சாரம் பாய்ந்து பைப் ஆலை ஊழியர் பலி

மின்சாரம் பாய்ந்து பைப் ஆலை ஊழியர் பலி

மேட்டூர்: மேட்டூர், கருமலைக்கூடல், புது காலனியை சேர்ந்தவர் கவுதம், 25. இவரது மனைவி வசந்தி, 24. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. கவுதம், சிட்கோ வளாகத்தில் உள்ள தனியார் பைப் ஆலையில் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றார். நேற்று காலை, ஆலை உரிமையாளர், 'கவுதமுக்கு உடல்நிலை சரியில்லை' எனக்கூறினார். இதனால் அங்கு வேலை செய்த மற்றொருவரிடம் வசந்தி கேட்டபோது, 'மின்சாரம் பாய்ந்து கவுதம் மயங்கிவிட்டார். மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்தது தெரியவந்தது' என்றார். இதுகுறித்து வசந்தி புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ