மேலும் செய்திகள்
மழையால் விமான சேவை பாதிப்பு
17-Sep-2025
ஓமலுார்: தரையிறங்க முடியாமல், அரை மணி நேரத்துக்கு மேலாக, வானில் வட்டமடித்த பயணிகள் விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை பெங்களூருவிலிருந்து, சேலத்துக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் மதியம், 1:40 மணியளவில் சேலம் விமான நிலையத்துக்கு மேலே, வானில் பலமுறை வட்டமடித்தபடி இருந்தது. இது குறித்து சேலம் விமான அதிகாரிகளிடம் கேட்ட போது, 'காற்று பலமாக வீசியதால், சிறிது நேரம் வானில் வட்டமிட்டது. பின் வழக்கம் போல், 2:20 மணிக்கு தரையிறங்கி, 2:45 மணிக்கு மீண்டும் பெங்களூருக்கு விமானம் புறப்பட்டது,' என்றனர்.
17-Sep-2025