பா.ம.க., - எம்.எல்.ஏ., சாலை மறியலுக்கு முயற்சி
சேலம்: சேலம், மாமாங்கத்தில், தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில், மாமாங்கம், கிளாக்காடு, ஊத்துக்-கிணறு அருகே கிராஸிங்; பர்ன் அன் கோ இடையே சிறு இணைப்பு பாலம் அமைக்கக்கோரி, பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், நேற்று சாலை மறி-யலில் ஈடுபட முயன்றார். இதை அறிந்து, சூரமங்கலம் போலீசார், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் வந்து, அவற்றை அமைத்து தருவதாக உறுதி அளித்ததால், மறியலை கைவிட்டார்.