உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ம.க., பொதுக்குழுவில் திரளானோர் பங்கேற்க முடிவு

பா.ம.க., பொதுக்குழுவில் திரளானோர் பங்கேற்க முடிவு

மேட்டூர், கொளத்துார் ஒருங்கிணைந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டம், கருங்கல்லுாரில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் சசிகுமார் தலைமை வகித்தார்.அதில் விரைவில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், சேலத்தில் நடக்கவுள்ள பா.ம.க., பொதுக்குழு கூட்டத்துக்கு, ஒருங்கிணைந்த கொளத்துார் ஒன்றியத்தில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்க வேண்டும்; சட்டசபை தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமித்து சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுப்பது உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கு மாவட்ட செயலர் ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் சண்முகம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மாரப்பன், துணை செயலர் சின்னப்பன், ஒன்றிய செயலர் டேவிட் பழனி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !