மேலும் செய்திகள்
நாய் கடித்து 18 பேர் 'அட்மிட்'
12-May-2025
சங்ககிரி, சங்ககிரி நகராட்சி பகுதிகளில், 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா, சங்ககிரி நகர பா.ம.க., சார்பில் அதே பகுதியில் நேற்று நடந்தது. சேலம் தெற்கு மாவட்ட துணை தலைவர் பழனிமுத்து தலைமை வகித்தார்.அதில் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி அனுசியா, 10ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி தீபிகா, லித்திக்ஷா, இனியா, மகிபாலன், பூமிஷ், 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., மாணவர் யுகாஷ், தனியார் மெட்ரிக் பள்ளி, 10ம் வகுப்பு தனுஷ்கா, குருபிரசாத் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கினார். நகர செயலர் அய்யப்பன், முன்னாள் செயலர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
12-May-2025