மேலும் செய்திகள்
புத்துணர்ச்சி பெற்றது உசிலம்பட்டி உழவர் சந்தை
21-Dec-2024
சேலம்: ''பா.ம.க., மனசாட்சியை மறந்து பேசி வருகிறது,'' என, அமைச்சர் வேலு கூறினார்.சேலம் சூரமங்கலம் உழவர்சந்தையில், நேற்று வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன் ஆகியோர் உழவர்சந்தை கடைகளை ஆய்வு செய்து, விவசாயிக-ளிடம் விற்பனை நிலவரம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, நுகர்-வோரிடம் குறைகளை கேட்ட பின், தானியங்கி மஞ்சப்பை விற்-பனை இயந்திரத்தை தொடங்கி வைத்தனர். வேளாண்துறை சார்பில், 19 பயனாளிகளுக்கு, உழவர்சந்தை அட்டை, உள் கட்ட-மைப்பு நிதி, உயிர் உரம் என, 19.25 லட்ச ரூபாய் மதிப்பில் பல்-வேறு உதவிகள் வழங்கப்பட்டன.அதன்பின், அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறியதாவதுகரு-ணாநிதி முதல்வராக இருந்தபோது, 1999ல், 100 உழவர்சந்தைகள் திறக்கப்பட்டன. அப்போது அமைச்சராக இருந்த வீர-பாண்டி ஆறுமுகம் முயற்சியால், சேலம் மாவட்டத்தில், 9 உழ-வர்சந்தைகள் தொடங்கப்பட்டன. தற்போது, 25 ஆண்டு நிறைவு பெற்றதால், உழவர்சந்தைகள் வெள்ளிவிழாவை கொண்டாடுகின்-றன.சூரமங்கலம் உழவர்சந்தையில் தினமும், 170 முதல் 200 விவசாயிகள் வரை, விற்-பனை செய்கின்றனர். இப்போது சேலம் மாவட்டத்தில், 13 உழ-வர்சந்தைகள் உள்ளன. காய்கறிகள் வரத்தும், விற்பனையும் அதிகம் என்பதால், தமிழகத்தில் சூரமங்கலம் உழவர்சந்தை நான்-காவது இடத்தில் உள்ளது. விவசாயத்துக்கென தனி பட்ஜெட் கொண்டு வரப்பட்டது. கடந்த 2021-22ல், 32,750 கோடி ரூபாய், 2022 -23ல், 33 ஆயிரம் கோடி ரூபாய், 2023 -24ல், 38,904 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பா.ம.க., மனசாட்சியை மறந்து பேசி வருகி-றது. வேளாண்மைக்கு தனியாக நிதி ஒதுக்கி, செலவு செய்யப்-பட்டு வருகிறது. மனசாட்சி இருப்பவர்கள் யாரும், அப்படி பேச-மாட்டார்கள். இவ்வாறு கூறினார்.கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வக-ணபதி, எம்.எல்.ஏ., அருள், முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம் உடனிருந்தனர்.
21-Dec-2024