உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் நகராட்சியுடன் இணைக்க பி.என்.பட்டி கவுன்சிலர்கள் எதிர்ப்பு

மேட்டூர் நகராட்சியுடன் இணைக்க பி.என்.பட்டி கவுன்சிலர்கள் எதிர்ப்பு

மேட்டூர்: மேட்டூர், 2ம் நிலை நகராட்சியுடன் அருகே உள்ள, பி.என்.பட்டி தேர்வு நிலை டவுன் பஞ்சாயத்தை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பி.என்.பட்டி டவுன் பஞ்சா-யத்து கவுன்சிலர் கூட்டம் நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் பொன்னுவேல் தலைமை வகித்தார்.மேட்டூர் நகராட்சியுடன் இணைப்பதன் மூலம் டவுன் பஞ்சா-யத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது பாதிக்கப்படும். கூடுதல் வரிச்சுமையை மக்கள் சுமக்க நேரும். மக்கள் நலன் கருதி, பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்தை மேட்டூர் நகராட்சியுடன் இணைக்கக்கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.,வை சேர்ந்த துணைத்தலைவர் குமார் உள்பட கவுன்-சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை