உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொக்லைன் ஓனர்கள் ஸ்டிரைக் பா.ம.க., - எம்.எல்.ஏ., ஆதரவு

பொக்லைன் ஓனர்கள் ஸ்டிரைக் பா.ம.க., - எம்.எல்.ஏ., ஆதரவு

சேலம், சேலம் மாவட்ட பொக்லைன் மற்றும் டோசர் உரிமையாளர்கள், வாடகை உயர்வை வலியுறுத்தி, 2 நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். நேற்று இரண்டாம் நாளாக, கோரிமேடு, கன்னங்குறிச்சி, 5 ரோடு, குரங்குச்சாவடி, பால்பண்ணை, இரும்பாலை சாலை ஆகிய இடங்களில், 500க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தியிருந்தனர். குரங்குச் சாவடியில் நடந்த போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பா.ம.க.,வின் சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.அதேபோல் பனமரத்துப்பட்டியில், ஒண்டிக்கடை சமுதாய கூடம் அருகே, 10க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்களை நிறுத்தி, அதன் உரிமையாளர்கள், நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர்கள் கூறுகையில், ''சாலை வரி, இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். டீசல் விலை, ஆட்கள் சம்பளம், உதிரி பாகம் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் தொழில் செய்ய முடியவில்லை. ஒரு மணி நேர வாடகை கட்டணத்தை, 1,000 ரூபாயில் இருந்து 1,300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் ஆதரவு தரவேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை