உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவிக்கு பாலியல் தொல்லைதொழிலாளி மீது போக்சோ

மாணவிக்கு பாலியல் தொல்லைதொழிலாளி மீது போக்சோ

மேட்டூர்:மாணவியை காதலிப்பதாக கூறி, பலமுறை பாலியல் தொந்தரவு செய்த, தொழிலாளி மீது போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம், மேச்சேரி, அமரத்தை சேர்ந்த டீக்கடை தொழிலாளி அஜீத்குமார், 24. இவர் அருகிலுள்ள தெத்திகிரிபட்டியை சேர்ந்த, 17 வயது மாணவிக்கு, அவரது ஊருக்கு சென்று பல முறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். கடந்த, 18 அதிகாலை அஜீத்குமாரும், மாணவியும் அவரது வீட்டுக்கு வெளியே தனியாக இருந்துள்ளனர். அப்போது நாய் சத்தம் கேட்டு, மாணவியின் தந்தை வெளியே வந்த நிலையில், இருவரையும் ஒன்றாக பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரது புகார்படி, சேலம் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், மாணவியை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அஜீத்குமார் மீது, மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி, போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள அவரை, மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை