தொழிலாளி மீது போக்சோ வழக்கு
சேலம், ஓமலுார், காமலாபுரத்தை சேர்ந்த தொழிலாளி சுரேஷ், 34. இவர், 'இன்ஸ்டாகிராம்' மூலம், சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்த பெண்ணிடம் பழகியுள்ளார். சில நாட்களுக்கு முன், அப்பெண்ணுக்கு, ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த பெண், சேலம் டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார் சுரேஷ் மீது, நேற்று, 'போக்சோ' வழக்குப்பதிந்து அவரை தேடுகின்றனர்.