சுகாதார வளாகத்தில் விஷ ஜந்துக்கள்
இளம்பிள்ளை, இளம்பிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட ரெட்டிமணியகாரனுார் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பயன்படுத்த, 5 வது வார்டுக்கு உட்பட்ட அரசு பள்ளி செல்லும் வழியில், பொது சுகாதாரவளாகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக சுகாதாரவளாகம் அருகே உள்ள புதரை அகற்றவில்லை. இதனால் தேள், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் படையெடுப்பதால் பெண்கள் அச்சத்துடன் கழிவறைக்கு செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில், பாம்புகள் வளாகத்தில் படுத்துவிடுவதால் பீதியடைகின்றனர். எனவே, புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.