உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கெங்கவல்லி ஸ்டேஷன் எதிரே குப்பையில் போலீஸ் தொப்பி

கெங்கவல்லி ஸ்டேஷன் எதிரே குப்பையில் போலீஸ் தொப்பி

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷன் முன், குப்பை போட பிளாஸ்டிக் தொட்டி உள்ளது. அதில் நேற்று, எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., பயன்படுத்துவதற்குரிய காக்கி நிற தொப்பி ஒன்று கேட்பாரற்று கிடந்தது. புகார் கொடுக்க வந்த மக்கள், குப்பையுடன் கிடந்த தொப்பியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட தொடர்ந்து பரவியது.இதுகுறித்து ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், ''போலீசார் பயன்படுத்தும் தொப்பியை, குப்பை தொட்டியில் போடக்கூடாது. அப்படி இருந்தால் அப்புறப்படுத்தவும், இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என, போலீசாருக்கு அறிவுரை வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி