திருமண நாளில் மகள் தற்கொலை தாய் புகாரால் போலீஸ் விசாரணை
தலைவாசல், தலைவாசல், வேப்பம்பூண்டியை சேர்ந்த, ராஜவேல் மனைவி சத்யா, 35. இவர்களுக்கு திருமணமாகி, 15 ஆண்டாகிறது. இரு மகள்கள், இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் திருமண நாளையொட்டி, ராஜவேலிடம், வெளியே அழைத்துச்செல்லும்படி மனைவி கூறியுள்ளார். அவர் மறுத்துவிட்டார். இதில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சத்யா, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சத்யாவின் தாய் விஜி, 55, வீரகனுார் போலீசில் புகார் அளித்தார். அதில், 'ராஜவேலுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறினார். திருமண நாளில் வெளியே அழைத்துச்செல்ல மறுத்து சத்யாவை தாக்கியுள்ளார். பேரக்குழந்தைகள், பள்ளியில் இருந்து வந்தபோது, சத்யா மின்விசிறியில் துாக்கிட்டு இறந்து கிடப்பதை பார்த்தனர். மகள் சாவு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.