மேலும் செய்திகள்
'ஐஸ்' சாப்பிட்ட5 சிறுவர்கள் பாதிப்பு
26-Apr-2025
சங்ககிரி:சங்ககிரி மலை அடிவாரத்தில் போலீசாரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற குற்றவாளி ஒருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.சேலம் மாவட்டம், சங்ககிரி, வைகுந்தம் அருகே வாழக்குட்டையில், மே 3ல் பெண்ணிடம், டூ - வீலரில் வந்த ஒருவர், முக்கால் பவுன் தோடு, மூக்குத்தியை பறித்துச் சென்றார். சங்ககிரி போலீசார் விசாரித்தனர். தனிப்படை அமைத்து அந்நபரை போலீசார் தேடினர்.இந்நிலையில், சங்ககிரி - சின்னாகவுண்டனுார் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே, மலை அடிவாரத்தில் ஒருவர் பதுங்கி இருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை சென்ற போலீசார், மலை அடிவாரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறு கட்டடம் முன், இருசக்கர வாகனம் இருப்பதை பார்த்து உள்ளே சென்றனர். அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார். எஸ்.ஐ., விஜயராகவன் அவரை பிடிக்க முயன்றபோது, அரிவாளால் வெட்டினார். தடுத்த ஏட்டு செல்வகுமார் கையிலும் காயம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அந்நபரின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். காயமடைந்து விழுந்தவரை போலீசார் சுற்றிவளைத்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், அவரிடம் விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது: சேலம் மாவட்டம் ஓமலுார், பொட்டிபுரம் அருகே கட்டிக்காரனுாரை சேர்ந்த நரேஷ்குமார், 32, என்பவரை சுட்டு பிடித்துள்ளோம். வாழக்குட்டையில் பெண்ணிடம் தோடு, மூக்குத்தியை திருடிச்சென்றவர். இவர், வயதான பெண்களை குறி வைத்து பலாத்காரம் மற்றும் கொலை செய்வதோடு, நகை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.மகுடஞ்சாவடி, தீவட்டிப்பட்டி உட்பட பல்வேறு ஸ்டேஷன்களில், மூதாட்டிகளிடம் நகை பறித்தது, கொலை உட்பட, 15 வழக்குகள் உள்ளன. விருதுநகரில் ஒரு மொபட்டை திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
26-Apr-2025