உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீஸ்காரர் பைக் திருட்டு

போலீஸ்காரர் பைக் திருட்டு

சேலம்:சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் ஹரிகரன், 31. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள, 7வது போலீஸ் பட்டாலியன் பிரிவில், கிரேடு 2 போலீஸ்காரராக உள்ளார். கடந்த, 8ல், மருத்துவ பரிசோதனைக்கு, மனைவியுடன், 'பல்சர்' பைக்கில், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். தொடர்ந்து உள்ளே சென்ற அவர், சிகிச்சை முடிந்து வெளியே வந்தபோது, பைக்கை காணவில்லை. அதன் மதிப்பு, 1,00,000 ரூபாய். இதுகுறித்து அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி