உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா துவக்கம்

பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா துவக்கம்

மேட்டூர், கொளத்துார் ஒன்றியம், கோட்டையூர் பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று துவங்கியது.கொளத்துார் ஒன்றியம், காவேரிபுரம் ஊராட்சி, கோட்டையூரில் பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சுற்றுப்பகுதியை சேர்ந்த காவேரிபுரம், கோட்டையூர், நாயம்பாடி, தெலுங்கானுார் கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது. பொங்கல் திருவிழாவின் முதல் நாளான நேற்று அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. இன்று (ஆக.,19) காவிரியில் இருந்து கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் செல்லுதல், சிறப்பு அன்னதானம், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். 21ல் கம்பம் பிடுங்குதல், 22ல் அம்மன் வாகன ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி