மேலும் செய்திகள்
அஞ்சலக கணக்கு துவங்க அறிவுரை
15-Sep-2024
அஞ்சலக சிறு சேமிப்பு: ஆகஸ்ட் வரை சாதனைசேலம், அக். 1-சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் கடந்த நான்கு ஆண்டுகளாக, மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று, சேலம் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. கடந்த 2023-24ல், அஞ்சலச சிறுசேமிப்பு திட்டத்தில், 2,287 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் தொடங்கி, ஆகஸ்ட் 2024 வரை, 1,148.97 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. படித்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் மகளிருக்கு, சுய வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், 11 மகளிருக்கு சிறுசேமிப்பு முகவர் பணி நியமன ஆணை, ஆறு பேருக்கு முகவர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கிராம மக்களையும் சிறுசேமிப்பு திட்டத்தில் இணைத்திட ஏதுவாக, ஒன்றிய அளவில், ஒவ்வொரு ஊராட்சியிலும் படித்து வேலைவாய்ப்பற்ற மகளிரை அஞ்சலக சிறுசேமிப்பு முகவராக நியமனம் செய்யப்படுகிறது. அவர்கள் மூலமாக, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களை, ஆர்.டி., சேமிப்பு கணக்கு தொடங்கி பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
15-Sep-2024