உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் மீது வேன் மோதல் அஞ்சல் ஊழியர் பலி

மொபட் மீது வேன் மோதல் அஞ்சல் ஊழியர் பலி

ஆத்துார், பெத்தநாயக்கன்பாளையம் அருகே வைத்தியகவுண்டன்புதுாரை சேர்ந்த, கோவிந்தன் மகள் சுவேதா, 25. இரு ஆண்டாக, பழனியாபுரி அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிந்தார். நேற்று மதியம், 3:00 மணிக்கு, 'ஜூபிடர்' மொபட்டில், சுவேதா, அவரது தங்கை சுவாதி, 23, ஆகியோர், அழகாபுரத்தில் இருந்து பெத்தநாயக்கன்பாளையம் வழியே சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து, ஆத்துார் நோக்கி வந்த, மினி சரக்கு வேன், மொபட் மீது மோதியது.சுவேதா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த சுவாதி, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மினி சரக்கு வேன் டிரைவரான, சங்ககிரியை சேர்ந்த கார்த்திக், 31, என்பவரிடம், ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !