உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் தவறி விழுந்த சினை பசுமாடு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த சினை பசுமாடு மீட்பு

தலைவாசல், தலைவாசல் அருகே, விவசாய கிணற்றில் தவறி விழுந்த சினை பசு மாட்டை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தலைவாசல் அருகே, கோவிந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆனந்தராஜ், 42. இவரது தோட்டத்தில் உள்ள, 40 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில், நேற்று மதியம், 12:50 மணியளவில், ஆறு மாத சினையாக இருந்த பசு மாடு தவறி விழுந்துள்ளது. ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராடி, சினை பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.* ஆத்துார் அருகே, பைத்துார் புதுார் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ், நீரோடை துார் எடுக்கும் பணியில் நேற்று, 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, சாரை பாம்பை பார்த்து ஓடியுள்ளனர். ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை லாவகமாக பிடித்து சென்று, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி