உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் /  தலை துண்டாகி பூசாரி பலி பஸ் படிக்கட்டால் விபரீதம்

 தலை துண்டாகி பூசாரி பலி பஸ் படிக்கட்டால் விபரீதம்

மேட்டூர்: சேலம் மாவட்டம், சின்னகாவூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 73; கருப்பசாமி கோவில் பூசாரி. நேற்று முன்தினம் மதியம், ஈரோடு - தொப்பூர் நெடுஞ்சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். கொலையா, விபத்தா என, கருமலைக்கூடல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சைக்கிளில் சென்ற அவர் மீது சுற்றுலா பஸ் மோதியதில், அவர் நிலை தடுமாறி விழுந்ததும், அப்போது, பஸ்சில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த படிக்கட்டு சீவி, அவர் தலை துண்டானதும் தெரியவந்தது. சுற்றுலா பஸ் டிரைவர் சத்தியமங்கலத்தை சேர்ந்த சுரேஷ், 30, என்பவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !