உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புதிர் போட்டியில் வெற்றி 3 கைதிகளுக்கு பரிசு

புதிர் போட்டியில் வெற்றி 3 கைதிகளுக்கு பரிசு

சேலம்: சேலம் மத்திய சிறையில், 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்த, வாரந்தோறும் புதிர் வினாடி - வினா, விடுபட்ட எண்களை கண்டுபிடித்தல், படங்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மன அழுத்தம் உள்ள கைதிகளுக்கு புதிர் வினாடி - வினா போட்டி நேற்று நடந்தது. எஸ்.பி., வினோத் தலைமை வகித்தார். அதில், 50க்கும் மேற்பட்ட கைதிகள் பங்கேற்றனர். திறமையாக பதில் அளித்த கைதிகள் விக்னேஷ்வரன், கோகுல் நந்தா, மனோகரன் ஆகியோருக்கு, சிறையில் பயன்படுத்தும்படி பிளாஸ்டிக் பாட்-டில்கள், பக்கெட், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மன இயல் நிபுணர் வைஷ்ணவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ