மேலும் செய்திகள்
பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக அழைப்பு
13-Nov-2024
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வாரவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொண்டாடப்பட்டது.விழாவை முன்னிட்டு, மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனை மேளா கண்காட்சி துவக்கப்பட்டது. கண்காட்சி விற்பனை மேளாவை, திருச்செங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.அதில், டி.சி.எம்.எஸ்., தயாரிப்பு பொருட்கள், கதர் கிராமிய பொருட்கள், சுயஉதவிக்குழு தயாரிப்புகள், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் தயாரிப்பு பொருட்கள், கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கத்தின் தயா-ரிப்பு பொருட்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை, ஏராளமான பொதுமக்கள் வாங்கி பயன் அடைந்தனர்.துணைப்பதிவாளர் பாலசுப்ரமணியம், திருச்செங்கோடு நகர கூட்-டுறவு வங்கி சார்பதிவாளர் சதீஸ்குமார், சங்க பணியாளர் அலு-வலர் ராஜேந்திரன், பொதுமேலாளர் நல்லமுத்து, அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
13-Nov-2024