உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பேராசிரியை கடிதம் சிக்கியது காதல் தோல்வியால் தற்கொலை

பேராசிரியை கடிதம் சிக்கியது காதல் தோல்வியால் தற்கொலை

சேலம், சென்னையை சேர்ந்த அரவிந்தன் மகள் திவ்யா, 30. சேலம், சீரகாபாடியில் விடுதியில் தங்கி, அரியானுாரில் உள்ள தனியார் ேஹாமியோபதி கல்லுாரியில் பேராசிரியையாக பணிபுரிந்தார். அவர் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் ஆட்டையாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தொடர்ந்து அவரது அறையில் கடிதம் ஒன்றை எடுத்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'திவ்யா சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்தார். அவர், வேறு பெண்ணுடன் பேசுவதை அறிந்து கேட்டுள்ளார். அப்போது அவர் காதலிக்க மறுத்ததாக தெரிகிறது. இந்த வேதனையில் திவ்யா, 'காதலித்த வாலிபர் கைவிட்டதால் உயிரை மாய்த்து கொள்கிறேன்' என, கடிதம் எழுதி வைத்திருந்தார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ