சொத்து தகராறு 2 பேருக்கு கத்திக்குத்து
ஓமலுார்: ஓமலுார், சக்கரைசெட்டிபட்டியை சேர்ந்தவர் சூர்யா, 28. மின் வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக உள்ளார். இவரது அத்தை மகன்களான ஜெயக்குமார், 47, ரமேஷ், 45, ஆகியோருக்கு சொத்துகளை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த, 1ல், சூர்யா, அவரது சகோதரர் மணி, 30, வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ், 'எனக்கு சொத்து கிடைக்காமல் போனதற்கு நீங்கள் தான் காரணம்' எனக்கூறி மணியை தாக்கினார். தொடர்ந்து அவரது வயிற்றில் சூரிக்கத்தியால் குத்தினார். அதை தடுக்க முயன்ற உறவினரான கோவிந்தராஜ் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சூர்யா நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஓமலுார் போலீசார், ரமேஷ் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.