மேலும் செய்திகள்
புதிய அங்கன்வாடி மையம் கிராம மக்கள் கோரிக்கை
28-Aug-2025
பனமரத்துப்பட்டி, காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, அங்கன்வாடிக்கு 6.50 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை அமைக்க முன்மொழிவு அனுப்பப்பட்டது.பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி ஊராட்சி சின்னையபுரத்தில் அங்கன்வாடி மையத்தை சுற்றி கழிவுநீர் குளம்போல் தேங்கியதால், குழந்தைகளுக்கு நோய் பரவும் ஆபத்து இருந்தது. இதுகுறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்த ஆக., 30ல் செய்தி வெளியானது.அன்று, பனமரத்துப்பட்டி பி.டி.ஓ., கார்த்தி, அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து, சுற்றுப்பகுதியில் தேங்கி இருந்த கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். நேற்று முன்தினம் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அருளாளன், அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார். அவரது அறிவுரைப்படி, ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், குழந்தைகள், அங்கன்வாடிக்கு செல்லும் பாதையில், 6.50 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை, கழிவு நீர் வெளியேற சிறுகால்வாய் அமைக்க, திட்ட மதிப்பீடு தயாரித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு முன்மொழிவு அனுப்பி வைத்தார்.
28-Aug-2025