சாலை ஒப்பந்தம் வழங்க லஞ்சம் அதிகாரியை கண்டித்து போராட்டம்
சேலம்: சேலம் மாவட்டம், தலைவாசலை சேர்ந்த கருப்பாயி என்பவர் சாலை ஒப்பந்ததாரராக கடந்த, 20 ஆண்டுகளாக பணிகளை மேற்-கொண்டு வருகிறார். நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலை-களுக்கு ஒப்பந்தம் கடந்த, 7 முதல் 23 வரை ஒப்பந்தம் கோரு-வதற்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 22 சத-வீதம் சாலைக்கு ஒப்பந்தம் போடுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். தரமாட்டோம் என்று கூறியதால், தரச்சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்குள், நேற்று மாலை அமர்ந்து ஒப்பந்ததாரர்கள் போட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து ஒப்பந்ததாரர் கருப்பாயி கூறுகையில்,'' முறைப்படி ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வழங்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கு முன்பாக லஞ்சம் கேட்ட அதி-காரியை, பிடித்து கொடுத்த நிலையில், மீண்டும் லஞ்சம் கேட்-பதால் தர மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டோம். 22 சதவீதம் லஞ்சம் வழங்கினால் சாலையை தரமாக அமைக்க முடியாது. எனவே லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் பெற-மாட்டோம்,'' என்றார்.