மேலும் செய்திகள்
கோர்ட் உத்தரவை மீறலாமா; கமிஷனரிடம் மக்கள் கேள்வி
14-Oct-2025
சேலம்:சேலம், 4 ரோடு அருகே, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய அலுவலகம் முன், செல்வகணபதி மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில், மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், பிரதமர் வீடு கட்டும் திட்ட நிலுவை நிதியை விடுவிக்க கோரி, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அறக்கட்டளை தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். அதில், 2024ல் உத்தரவு பெற்ற பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை, 10 மாதங்களாக வழங்கப்படவில்லை. அதனால் வீடு கட்டுமானப்பணி பாதியில் நிற்பதால், இரு அரசுகளும் உடனே நிதியை வழங்கும்படி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து, கோட்ட நிர்வாக பொறியாளர் விஜயமோகனிடம் கேட்டபோது, ''வரிசைப்படி, பட்டியலை கருவூலத்துக்கு அனுப்பி, அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்,'' என்றார்.
14-Oct-2025