மேலும் செய்திகள்
மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 35 பேர் கைது
17-Oct-2025
சேலம், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமை வகித்தார்.அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; தி.மு.க., தேர்தல் அறிக்கை, 309க்கு மாறாக, இந்த பிரச்னையில் புதிதாக அமைத்த, மூவர் குழுவை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், 10 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, மாநில முன்னாள் தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், இளங்கோ, ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
17-Oct-2025