மேலும் செய்திகள்
5 நாள் பட்டறிவு பயணமாக கர்நாடகா சென்ற விவசாயிகள்
25-Jun-2025
பனமரத்துப்பட்டி,பனமரத்துப்பட்டி, சாமகுட்டப்பட்டி கிராமத்தில், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், இயற்கை முறையிலான பயிர் சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கு நேற்று தொழில்நுட்ப பயிற்சி அளித்தனர்.பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத் தலைமை வகித்தார். இயற்கை இடுபொருட்களான, பஞ்சகவ்யம், மீன் அமிலம் உள்ளிட்டவை தயாரிக்கும் முறைகள், இயற்கை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்தனர். அனைத்து விவசாயிகளுக்கும் இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட்டன. உதவி வேளாண் அலுவலர் சின்னதுரை, அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா உள்ளிட்டோர், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில், 40 விவசாயிகள் பங்கேற்றனர்.
25-Jun-2025