உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓட்டுச்சாவடி அலுவலருக்கு உபகரண பெட்டகம் வழங்கல்

ஓட்டுச்சாவடி அலுவலருக்கு உபகரண பெட்டகம் வழங்கல்

சேலம், சேலம் மாநகர பகுதிகளில் வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கப்பட உள்ளது. இதில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடுகள் தோறும் சென்று, கணக்கெடுப்பு படிவங்களில் விபரங்களை உள்ளீடு செய்து, வாக்காளரிடம் கையொப்பம் பெற உள்ளனர்.வீட்டு எண், பெயர், உறவு முறை பெயர், பாலினம், வயது, வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய விபரங்களை அடிப்படையாக வைத்து, இப்போதுள்ள பட்டியலில் சரிபார்க்கப்பட உள்ளன.மாநகராட்சிக்குட்பட்ட சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு தொகுதிகளில் இப்பணிகளை மேற்கொள்ளும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, படிவங்கள், உபகரணங்கள் அடங்கிய பெட்டகங்களை நேற்று மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வழங்கினார். துணை கமிஷனர் நவேந்திரன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை