/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தெர்மல் ஊழியரின் குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ., மூலம் ஓய்வூதியம் வழங்கல்
தெர்மல் ஊழியரின் குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ., மூலம் ஓய்வூதியம் வழங்கல்
சேலம், 'கீன் எரெக்டர்ஸ்' நிறுவனம் மூலம், மேட்டூர் தெர்மல் பவர் பிளான்ட் - 2ல், ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய வெங்கடாசலம் என்பவர், 2024 அக்., 26ல், பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.இதனால் அவர்களது குடும்பத்தினருக்கு, சார்ந்தோர் உதவித்தொகையாக, மாதம், 14,430 ரூபாய் வழங்க, இ.எஸ்.ஐ., சேலம் துணை மண்டல அலுவலக இணை இயக்குனர்சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.அதன்படி நேற்று முன்தினம், மேட்டூர் தெர்மல் பவர் பிளான்ட் - 2 மேற்பார்வை பொறியாளர் மகேஸ்வரன், கீன் எரெக்டர்ஸ் நிறுவனத்தின் பிரபுதேவன் முன்னிலையில், மேட்டூர் இ.எஸ்.ஐ., கிளை அலுவலக மேலாளர் அருண் பாலாஜி, ஓய்வூதிய தொகையை, இறந்த வெங்கடாசலத்தின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.