கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தலைவாசல்: வீரகனுார் குடியிருப்பு பகுதியில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலைவாசல் அருகே, வீரகனுார் டவுன் பஞ்சாயத்து, 10வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்-புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியொட்டி, டவுன் பஞ்சா-யத்துக்கு, ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு, கழிவு நீர் சுத்திக-ரிப்பு நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பணிகளை குடியிருப்பு பகுதியில் மேற்கொள்வதற்கு, அம்-பேத்கர் நகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று, 100க்கும் மேற்பட்ட மக்கள், வீரகனுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும்; நோய் தொற்று மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் என, பொதுமக்கள் கோஷம் எழுப்-பினர். இத்திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரி-வித்து, வீரகனுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு அளித்-தனர்.