மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு முற்றுகை
18-Jun-2025
சேலம், காடையாம்பட்டி அடுத்த ஜோடுகுளி ஊராட்சி மக்கள், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதன்பின் அவர்கள் கூறியதாவது: ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தொடர்ந்து வேலை கொடுத்து, அதிலும் தில்லுமுல்லு நடக்கிறது. புதிதாக வீடு கட்டி, வரி விதிப்பு ரசீது கேட்டால், லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், அங்குள்ள ஏரியில் கொட்டி நிரப்புவதால், ஏரி துார்ந்து வருகிறது. அதேநேரம் குடிநீர், தெருவிளக்கு, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் ஊராட்சியில் கேள்விகுறியாக உள்ளது. இது தொடர்பாக, காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இவ்வாறு கூறினர்.ஊராட்சி செயலர் பெரியசாமி கூறுகையில், ''ஊர் மக்கள் சொல்வது எல்லாமே தவறான தகவல்,'' என்றார்.
18-Jun-2025