உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர், தேசிய ஊரக வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

குடிநீர், தேசிய ஊரக வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

கெங்கவல்லி: சீரான குடிநீர் மற்றும் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்கக்கோரி, பொதுமக்கள் சாலைமறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, ஆணையாம்பட்டி புதுார் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் வினி-யோகம் செய்யப்படுகிறது. தேசிய ஊரக வேலை திட்டத்தில், சரியாக வேலை வழங்குவ-தில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து நேற்று காலை, 11:30 மணியளவில், கெங்கவல்லி - தெடாவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு வந்த கெங்கவல்லி போலீசார், பொதுமக்களிடம் பேச்சு-வார்த்தை நடத்தினர். பொதுமக்கள், 'தேசிய ஊரக வேலை திட்-டத்தில், சிலருக்கு மட்டுமே வேலை வழங்குகின்றனர். ஊரக வேலை அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். காவிரி குடிநீர் சீரான முறையில் வழங்காததால், உப்பு தண்ணீரை அருந்த வேண்டியுள்ளது,' என்றனர்.போலீசார், 'சம்மந்தப்பட்ட கெங்கவல்லி ஒன்றிய ஊரக வளர்ச்சி அலுவலர்களை அணுகி, முறையிட்டு தீர்வு காண வேண்டும். சாலைமறியல் செய்தால், பஸ் உள்ளிட்ட வாகனங்-களில் பயணிக்கும் பொதுமக்கள், பல்வேறு இன்னலுக்கு ஆளாக நேரிடுகிறது' என்றனர். அதன்பின் மதியம், 12:10 மணியளவில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், கெங்கவல்லி - தெடாவூர் சாலையில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தொடர்ந்து, கெங்கவல்லி ஒன்றிய அலுவலகம் சென்ற பொது-மக்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனர். அங்கு, பி.டி.ஓ., உள்ளிட்ட அலுவலர்கள் இல்லாததால், அங்கிருந்த பணியாளர்களிடம் வலியுறுத்தி விட்டு, பொதுமக்கள் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை