மொபைல், சார்ஜர் பறிமுதல் கைதியிடம் விசாரணை
சேலம் :சேலம் மத்திய சிறையில் போலீசார் நேற்று காலை நடத்திய சோதனையில், 'பி' பிரிவு அறைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொபைல் போன், பேட்டரி, சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த சென்னையை சேர்ந்த விசாரணை கைதி முருகன் கருப்பசாமி, 30, என்பவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதுபற்றி ஜெயிலர் ராஜேந்திரன் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.