உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழையால் பூக்கள் சேதம் அவரை, பீன்ஸ் விலை சதம்

மழையால் பூக்கள் சேதம் அவரை, பீன்ஸ் விலை சதம்

சேலம்:‍சேலம் மாவட்டத்தில், 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. அங்கும், மார்க்கெட்டுகளிலும், அவரை, பீன்ஸ் விலை கிலோ, 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது:அவரை அறுவடை சீசன், தற்போது தொடங்கி, பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை இருக்கும். சமீபத்தில் பெய்த மழையால் அவரைச் செடிகளில் பூக்கள் கொட்டி விளைச்சல் குறைவாக உள்ளது. விளைச்சலாகும் காய்களிலும், கரும்புள்ளி தென்படுவதால் நோய் பாதிப்பு இருக்கிறது. இதனால் அறுவடை செய்யப்படும் அவரை தரமாக இல்லை. மார்க்கெட்டுக்கு, 20 சதவீதம் மட்டும் வரத்து உள்ளது. இதனால் பீன்ஸ் விலை உயர்ந்துள்ளது.கடந்த, 1ல் உழவர் சந்தைகளில் அவரை கிலோ, 56 முதல், 66 ரூபாய், பீன்ஸ் கிலோ, 70 முதல், 80 ரூபாய்க்கு விற்பனையானது. இதைவிட, வெளி மார்க்கெட்டில் கிலோ, 10 ரூபாய் உயர்ந்து விற்பனையானது. உழவர் சந்தையில் நேற்று அவரை, பீன்ஸ் கிலோ, 90 முதல், 100 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 120 ரூபாய்க்கும் விற்பனையாகின.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை