உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடி, மின்னலுடன் மழை

இடி, மின்னலுடன் மழை

ஏற்காடு : ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதி களில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. மதியம், 3:30 மணி முதல், வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. 3:50க்கு லேசான மழை பெய்யத்தொடங்கி, 20 நிமிடம் நீடித்தது. 4:40 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. பின், 4:30க்கு பலத்த இடி, மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை, 5 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, 8 மணி வரை பெய்தது. பின், 8:30 முதல், இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் ஏற்காடு குளுகுளுவென மாறியது. மேலும் ஏற்காடு டவுன் பகுதி, மலைக்கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேபோல் வாழப்பாடியில் நேற்று மாலை முதல், இரவு வரை மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை