உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெடித்து சிதறியது மின் பெட்டி இருளில் மூழ்கியது ராஜாராம் நகர்

வெடித்து சிதறியது மின் பெட்டி இருளில் மூழ்கியது ராஜாராம் நகர்

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி, ராஜாராம் நகரில், 10 குறுக்கு தெருக்கள் அடுத்தடுத்து உள்ளன. அப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில் இருந்து நேரடியாக வீடுகளுக்கு இணைப்பு வழங்காமல், கம்பத்தில் மின்பெட்டி பொருத்தி அதன் வழியே இணைப்புகள் தனித்தனியே வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மின்பெட்டியில், 10 முதல், 20 இணைப்புகள் வரை உள்ளன. அதன்படி ஒவ்வொரு கம்பத்திலும் இரு பெட்டிகள் பொருத்தப்பட்டு அதன் வழியே வீடுகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு காற்றுடன் கூடிய மழை பெய்த நிலையில், 8வது குறுக்குத்தெரு சந்திப்பில் உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்பெட்டி தீப்பொறியுடன் வெடித்து சிதறியது. அதனால், 7, 8வது குறுக்கு தெரு, ராஜாராம் நகர் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு, 1:30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் குறைவான மின் அழுத்தத்தால் மின்சாதனங்கள் சரிவர இயங்கவில்லை. இதனால் இரவு முழுதும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.பாதிக்கப்பட்ட அவர்கள், மின்னக எண்ணுக்கு புகார் தெரிவித்த பின், காலை, 11:00 மணிக்கு ஒயர்மேன் சாமி, தற்காலிக ஊழியர் குமார், 50, வந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குமார் கையில் காயம் ஏற்பட்டது. உடனே நகர கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேமலதா சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். பின் பழுதுபார்ப்பு பணி முடிந்து, மதியம், 12:00 மணிக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை