மேலும் செய்திகள்
ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்முக தேர்வு
18-Nov-2024
ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள்இன்று முதல் நேர்முகத்தேர்வு தொடக்கம்சேலம், நவ. 28-சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வை நடத்த, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, சேலம் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு அறிவுரை வழங்கினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், கூட்டுறவு சங்க பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில், ௧௫௨ விற்பனையாளர், 10 கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இதில் தகுதியானவர்களுக்கு, விற்பனையாளர் பணியிட நேர்முகத்தேர்வு, நவ., 2௮(இன்று) முதல், டிச., ௭ வரையும், கட்டுனர் பணியிட நேர்முகத்தேர்வு டிச., 7 முதல், டிச., 9 வரை, சேலம், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக்கூடத்தில் நடக்க உள்ளது.இதை சிறப்பாக நடத்த, சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலர்கள், நேர்காணல் அலுவலர்கள், இதர பணி மேற்கொள்ளும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு அனுமதிச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, அறிவுரைகளை முழுமையாக பின்பற்றவேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு சந்தேகம் இருப்பின் அவர்களை வழிநடத்தவும், உரிய விபரங்களை வழங்கவும், நேர்காணல் உதவி மையத்தில், உதவி மைய குழு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
18-Nov-2024