செம்மண் கடத்தியவர் கைது; வாகனங்கள் பறிமுதல்
செம்மண் கடத்தியவர் கைது; வாகனங்கள் பறிமுதல்நங்கவள்ளி, அக். 30-நங்கவள்ளி, குட்டப்பட்டி, கணக்குப்பட்டி காட்டுவளவில் இருந்து டிப்பர் லாரியில் செம்மண் கொண்டு செல்வதாக, வி.ஏ.ஓ., போதம்மாளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அவர், டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரத்தை கைப்பற்றி, நங்கவள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், டிப்பர் லாரி டிரைவர் கார்த்திக், 26, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடுகின்றனர்.