செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
இடைப்பாடி, டிச. 19--பூலாம்பட்டி அருகே சென்னிமலையார் பகுதியில், லாரிகளில் செம்மண் கடத்தப்படுவதாக, சேலம் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில், சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் அரவிந்த், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது எதிரே வந்த, டிப்பர் லாரியை நிறுத்தினார். அதன் டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். லாரியை பறிமுதல் செய்து, பூலாம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து, தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.