மேலும் செய்திகள்
2 குழந்தைகளுடன் தாய் மாயம்
10-Jul-2025
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டி உத்தன்டிவளவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 28. இவர் கடந்த, 11ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பிரியதர்ஷினியின் தாய் செல்வி அளித்த புகார்படி தாரமங்கலம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மறுநாள் உடலை வாங்க மறுத்து, ஆரூர்பட்டியில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண் முகத்தில் காயம் இருந்ததால், அவரது கணவரை கைது செய்ய வலியுறுத்தினர். தாரமங்கலம் போலீசார், சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆனால் உடலை பெற்றுக்கொள்ளவில்லை.இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் கிடைத்தது. அதில் தற்கொலை என தெரியவர, உறவினர்கள் உடலை பெற்று, உத்தன்டிவளவில் நேற்று அடக்கம் செய்தனர்.
10-Jul-2025